அட அதாங்க இது

எலிகள் மாநாடு நடந்தது..

.எல்லாம் பூனையைப் பற்றிதான்...பூனை செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தங்கள் இனம் குறைந்து வருவதை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டன. .. பூனையை விரட்ட ஆளுக்கு ஒரு யோசனை கொடுத்தாயிற்று. ..எதுவும் சரிபடவில்லை...இறுதியில் வயதான அனுபவம் மிக்க எலி ஒன்று பேசியது... நண்பர்களே துஷ்டனைக் கண்டால் தூர விலகுவதே நல்லது... அதனால் பூனை வந்தால் ஒளிந்து கொள்வோம் என்றது ...மற்ற எலிகள் அதை ஆமோதித்தன. .. அப்போது ஒரு புத்திசாலி எலி கேள்வி எழுப்பியது...பூனை திடீரென்று நம் முன்னே பாய்ந்து விடுகிறது ...அதனால் ஏற்படும் நடுக்கத்தில் நம்மால் தப்பிக்க இயலாமல் போகிறது...அதனால் பூனை வருவதை நாம் முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது என்றது... அதுவும் சரிதான் பூனை வருவதைத் தெரிந்து கொள்ள நீயே ஒரு உபயம் சொல் என்றன மற்ற எலிகள்...உடனே அந்த எலி பூனையின் கழுத்தில் மணி கட்டி விட்டால் அது வருவது பற்றி நம்மால் தெரிந்து கொள்ள முடியும் என்றது.... ஆஹா என்ன ஒரு அருமையான யோசனை என்று எல்லா எலிகளும் அந்த புத்திசாலி எலியைப் பாராட்டின. .. அப்போது தான் இந்தக் கேள்வி எழுந்தது. ..பூனைக்கு யார் மணி கட்டுவது ??? என்பதுதான் அந்த கேள்வி. ..ஆம் ஒரு பூனையின் முன் சென்று அதற்கு மணி கட்டுவது எப்படி இயலும்...
நம்மால் செய்ய இயலாத காரியம் பற்றி பூனைக்கு யார் மணி கட்டுவது... என்று கூறுவோம் அல்லவா...அந்த பழமொழி வந்த கதை இது...

எழுதியவர் : செல்வமணி (6-Aug-16, 11:57 pm)
பார்வை : 383

மேலே