நண்பர்கள் தினம் வாழ்த்து
உறவாட உள்ளனர் உலகில் ஆயிரம்
உண்மை உள்ளமுடன் இருப்பார் சிலர் !
உயிராய் உறவாய் இறுதிவரை இருக்கும்
உயிர்கள் உலகில் என்றும் நண்பர்களே .....
அனைவருக்கும் நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள் !
என் உயிரான எழுத்து தள தோழர்களுக்கும் தோழிகளுக்கும், பெரியோர்க்கும் இளையோருக்கும் , தளத்தின் நிர்வாகிகளுக்கும் என் அன்பார்ந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .
தொடர்பில் உள்ள நட்புக்களுக்கும் , தொடர்பில் இல்லாவிடினும் நெஞ்சில் நிலைத்த நண்பர்களுக்கும் , நல்லதையே நாடும் , நினைக்கும் எனதருமை நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ..
என்றும் நலமோடும் வளமோடும் மன அமைதியோடும் பல்லாண்டு வாழ்ந்திட உளமார வாழ்த்துகிறேன் .
பழனி குமார்