இன்னுமா தெரியவில்லை
நண்பர்கள் தினத்திற்கு
கவிதை எழுத வேண்டும்
ஆனால் கவிதையோ
தோன்றவே இல்லை
என்ன செய்வது
கை குலுக்கி
நண்பர்கள் தின வாழ்த்தை தெரிவித்துவிடலாம்
அதை விட
சிறந்த கவிதை
வேறு உண்டா!?
நடமாடும் கவிதை அவள்
உவமை எல்லாம்
தோற்கும் உருவகம்
அவள்
அவள் யார்?
தோழி என்னும் தாய் அவள்
தோழி என்னும் சேய்
அவள்
பிடிவாதம் அவள்
பிடி சோறும் அவள்
வலி நிவாரணி அவள்
வலியவள்
தழுவலின் வார்த்தை அவள்
வருடலின் மொழி அவள்
ஊடலின் தேசம் அவள்
அன்பின் உருவம் அவள்
தாய்மடியவள்
சிலிர்க்க வைக்கும்
வெயில் அவள்
உருக வைக்கும்
பனி அவள்
வட்டத்தின் ஆரம் அவள்
வாழ்க்கையின் துடிப்பு அவள்
இன்னுமா!
தெரியவில்லை?
அவளே என் தோழி
கேட்காமல்
உயிரையே
தருவது நட்பு
அந்த நட்பிற்குள்
வாழும் உலகமே
எதை பற்றி
வேண்டுமானாலும்
முழுமையாக
சொல்லிவிடலாம்
ஆனால்
நட்பை பற்றி
சொல்லி முடிக்க முடியாது
உணரத்தான் வேண்டும்
பார்வையில்
புரியாது
நட்பு
முறைப்பாள்
திட்டுவாள்
அந்த அளவிற்கு
உள்ளுக்குள்
அவ்வளவு பாசம்
வேஷம் போட தெரியாது
அவளுக்கு
வேஷம் போட
அவசியமில்லை
நட்பில்
அவளுக்கு
இந்நாளில்
சமர்பிப்பதில்
பெருமை கொள்கிறேன்
இனிய
நண்பர்கள் தின
நல்வாழ்த்துக்கள்
என் உயிர்த்தோழியே...
~ உன் தோழி பிரபாவதி வீரமுத்து