நண்பன்

நண்பன் வானகத்தில் தாரகைப்போல்

மங்கா ஒளி கொண்டு மிளிரும்

தன் ஒளியால் வெறும் கல்லாம்

கிரகங்களுக்கு ஒளிதரும் தாரகைப்போல்

சந்திரனுக்கு ஒளி தரும் சூரியன் போல்

நட்பென்னும் ஒளியால் நட்பிற்கு

நீங்கா ஒளி தந்து காத்து மகிழ்ந்திடுவான்

தவறான வழியில் ஒரு போதும்

நண்பன் செல்வதை விடமாட்டான்

தயங்காமல் தவறை தட்டி கேட்பான்

நண்பனுக்கு எல்லாம் தந்திடுவான்

தன்னையே தந்திட தயங்கமாட்டான்

எழுதியவர் : வச்சவன்-தமிழ்பித்தன்-வாச (7-Aug-16, 4:43 pm)
பார்வை : 349

மேலே