சென்று வா நிலவே
ஊர் உறங்குது நிலவே
நீ ஏன் உறங்கவில்லை
நான் உறங்கவில்லை என்றறிந்து
எனக்கு தாலாட்டு பாட
நீ உறங்கலையோ
நீ தாயாக மாறி
தாலாட்டு பாடினாலும்
என்னவனைக் காணாமல்
தூக்கம் என் கண்களை
தழுவுவது எப்போது
பொழுது புலர்ந்து விட்டால்
நீ உறங்குவது எப்போது
சென்று வா நிலவே
நீ சென்று உறங்கிடு
காத்திருப்பேன் கண் விழித்து
நான் என்னவன் வீடு திரும்பும்வரை
சென்று வா நிலவே சென்று வா
என் காதல் அவனைக் காத்து நிற்கும்
நானறிவேன் அவன் திரும்பி வந்திடுவான்
நானறிவேன் அவன் வரும் வரை
உறங்காமல் காத்திருப்பேன்
நீ சென்று வா நிலவே
உறங்கிவிட்டு நாளை வா
என் மன்னவனும் வந்திருப்பான்
தாயக வந்து எங்களை வாழ்த்த வா நிலவே