கடுகு நட்பு கவிதை
வருவது தெரியாது
வந்தால் போகாது
நட்பு
****************
பள்ளி பருவம் தொடங்கி
பல் விழுந்த பருவம் வரை
நட்பு
******************
கண்டவுடன் கொண்டாலும்
கண்டமற்றது
நட்பு
******************
தடக்கி விழுந்தால் தூக்கும்
தூக்கிவிடுவதே தொழில்
நட்பு
*******************
காடு செல்லும் போது
முதல் கட்டை பிடிப்பது
நட்பு