காதல் பாடல்

காட்டுரோசா காட்டுரோசா
கட்டழக காட்டுரோசா

மாட்டுரோசா மாட்டுரோசா
என்ன நெஞ்சுல மாட்டுரோசா

சூட்டுரோசா சூட்டுரோசா
தலையில் பூவை சூட்டுரோசா

பூட்டுரோசா பூட்டுரோசா
அழகு சிதறுது பூட்டுரோசா

நாட்டுரோசா நாட்டுரோசா
அழகின் நிலைய நாட்டுரோசா

ஒட்டுரோசா ஒட்டுரோசா
மனசில என்ன ஒட்டுரோசா

ஓட்டுறோசா ஓட்டுறோசா
போடு எனக்கு ஒட்டுரோசா

பட்டுரோசா பட்டுரோசா
தகரம் மின்னுது உன்கை பட்டுரோசா

மொட்டுரோசா மொட்டுரோசா
உன் பேச்சில் பிறக்குது புது மெட்டுரோசா

துட்டுரோசா துட்டுரோசா
நீ சிரிச்ச சிதறுது துட்டுரோசா

திட்டுரோசா திட்டுரோசா
பொறுக்கி பயல நீ திட்டுரோசா

தீட்டுரோசா தீட்டுரோசா
என்ன கண்ணில் மையா தீட்டுரோசா

கூட்டுரோசா கூட்டுரோசா
என் குப்பை மனச கூட்டுரோசா

வீட்டுரோசா வீட்டுரோசா
நீதான் என்னோட வீட்டுரோசா

நீட்டுரோசா நீட்டுரோசா
காதல் பூவை நீட்டுரோசா

எழுதியவர் : குமார் (8-Aug-16, 5:31 pm)
பார்வை : 473

மேலே