கருமை
கருஇரவினில் வருவதால் தான்
நிலவே அழகு!
கருவிழிகள் இருப்பதால் தான்
முகமே அழகு!
கருகூந்தல் இருப்பதால் தான்
சிரமே அழகு!
கருநிறம் இருப்பதால் தான்
வெண்ணிறமே அழகு!
ஆனால் இது புரியாமல்
கருநிறத்தவர்களை
அழகில்லை என்பது தகுமோ???
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
