பெண்கள் நாட்டின் கண்கள்

பெண்கள் இப்பூவுலகில் கிடைக்க பெற்ற ஓர் அதிசய பரிசு பொருள். பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்யும் திறன் படைத்தவர்கள் தான் பெண்கள்.

பெண்கள் மென்மையான உடல் உறுப்புகளை பெற்றவர்கள். அவர்கள் இதயம் எப்பொழுதும் அன்பை மட்டும் தான் கொடுத்து பெறுவதற்க்கு ஏங்கும்.

ஆண்கள் சிறு ஏமாற்றங்களை கூட தாங்கி கொள்ள மாட்டார்கள். உடனே பல மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். ஆனால் பெண்களோ தன்னை காதல் வசனம் பேசி ஏமாற்றும் ஆண்களை கூட மன்னிக்கும் மனோபலம் படைத்தவர்கள்.

எதனையும் ஆராய்ந்து பொறுமையாக சிந்தித்து யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் முடியெடுப்பவர்கள் தான் பெண். பிறந்த பொழுது தாய் தந்தையரை விட்டு கொடுக்க மாட்டாள். திருமணம் ஆன பிறகு கணவனை விட்டு கொடுக்க மாட்டாள். குழந்தையான பிறகு பிள்ளைகளை விட்டு கொடுக்க மாட்டாள். இப்படியாக தியாக உணர்வுடன் வாழ்வதையே மகிழ்ச்சியான வாழ்க்கையென்று வாழ்பவள்.

சில பெற்றவர்கள் பெண் குழந்தையை பல கடின வார்த்தைகளால் திட்டுவதுண்டு. ஏன் பெரும்பாலான வீடுகளில் பெண் பிள்ளைகளை சரியாக கவனிப்பதேயில்லை, அப்படியிருந்தும் பெண் தன் பிறந்த வீட்டை ஒரு போதும் விட்டு கொடுப்பதில்லை. மிகுந்த பாசம் வைத்திருப்பார்கள்.

என்னதான் திட்டினாலும் காலையே சுற்றி வருவார்கள். இதற்கு காரணம் பெண்கள் தனக்கு மிகவும் பிடித்தவர்களை தம் மனதை காய படுத்தினாலும் அதை அன்றே மறந்து நிதானம் ஆகிவிடுவார்கள்.

தனக்கென்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னை சுற்றி இருப்பவர்களின் மகிழ்ச்சியையே பெரிதாக எண்ணுபவன் பெண். அப்பா சிறிதாக திட்டி விட்டாலே ஆண்கள் அப்பாவை பற்றி தன் நண்பர்களிடம் கடுமையான வார்த்தைகளால் திட்டுவார்கள். ஆனால் பெண்கள் அப்படியில்லை. குடிகார கணவன் வாய்த்தாலும் கூட அவனே உலகம் என்று வாழ்வார்கள்.

ஒரு ஆணுக்கு காமம் வந்தாலோ அந்த ஆணுக்கு எந்த வொரு பாதிப்பும் இல்லை, ஆனால் பெண்களோ பாதிப்பு அவர்களுக்கு தான். அதையும் பொருட்படுத்தாமல் தன் கணவனோ அல்ல காதலனோ இன்பம் பெற தனையே அர்ப்பணித்து தியாக உணர்வாக வளம் வருவார்கள். அந்த இன்பத்தால் கருவுற்றாள் அக்கருவை பாத்து மாதம் சுமந்து தன்னை வருத்தி கொண்டு மகிழ்வடைவாள் மெழுகுவர்த்தி போல்.

இவ்வகையான தியாகத்தை அப்பாவும் சரி கணவனும் சரி அறிந்துகொள்வதே இல்லை. பெண் என்பவள் என்றாவது ஒரு நாள் புகுந்த வீட்டுக்கு செல்ல கூடியவள்தான். அதற்காக அவளை வெளி உலகம் அறியாமல் வளர்க்கப்படுவது சமுதாயத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

எந்த நாடு பெண்களை போற்றுகிறதோ அந்த நாடு சீரும் சிறப்புமாக செழிப்பாக இருக்கும். இதற்கு எடுத்துக்காட்டு இங்கிலாந்து. அந்நாட்டை காலம் காலமாக பெண்கள் தான் ஆண்டு வருகிறார்கள்.

பெண்களை பெரிதளவில் மதித்து போற்றுவதால் அந்நாடு இருபோற்றாம் நூற்றாண்டிலும் கூட பொருளாதாரம், வியாபாரம் என எல்லாவற்றிலும் முதலாவதாக இருக்கிறது. அக்கால அரசர்கள் பெண்களை வெறும் போக பொருளாக பயன் படுத்தியதால் நாடு, பொருள், நகைகள் என அனைத்தையும் இழந்தார்கள்.

ஒரு சமுதாயத்தை திறன் பட செயல்படுத்தும் பொறுப்பு பெண்களிடம் தான். பெண்கள் சிறப்பாகவும் வெளியுலகம் அறிந்து வளர்க்கப்பட்டால்தான் குழந்தைகளை திறமையாக வளர்க்க முடியும். ஆகையால் நமது சமுதாயத்தை வளர்ச்சியடைந்த சமுதாயமாக மாற்றியமைக்கும் பொறுப்பு பெண்களுக்கு இருப்பதால், அவர்களின் பணி எந்தவொரு தங்கு தடையின்றி நடைபெற வழி வகுப்போம். பெண்களை போற்றுவோம்! முன்னேறுவோம்.

எழுதியவர் : பவநி (9-Aug-16, 2:14 pm)
பார்வை : 11990

சிறந்த கட்டுரைகள்

மேலே