அவள் அழகில் நனைந்த மழை

அவள் அதரங்களில் இருந்து
உதிர்ந்த முத்துகளைப் பார்த்து
சிதறிய மழைத்துளிகள்
சில மணித்துளிகள்
உறைந்துதான் போயின...
அவள் அழகிய
விழி வீச்சில்
மின்னலும் தான்
பயந்து ஒளிந்தன
அக்குட்டி தேவதையின்
அழகில் மிளிர்ந்தது
மழையும் கொஞ்சம்
பாவம் மழை - அதன்
நிறத்தை தானும்
பகிர்ந்து மழையை
வண்ணமாக்கிவிட்டாள்...