நாகரிகம்

எங்குபோய் சொல்வேன்
யாரிடம் போய் சொல்வேன்
நாகரீகம் என்றுதானே
ஏற்றுக்கொண்டோம் அவளத்தை

வாகனத்தில் ஏற்பட்ட பிழையா
இல்லை வளர்ப்பில் ஏற்பட்ட பிழையா
மானம் போவது கூட அறியாத
காதல் மோகமா

என்ன செய்வேன் நான்
ஏட்டு கல்வி படித்தவன் நான்
ஆபாசம் இல்லாமல் எழுதிவிட்டேன்
உள்ளத்தில் கோர அழுகையோடு

பிறந்த மேனியாக வந்துவிடும்
புத்தம் புதிய நாகரீக ஆடை
தூற்றுவோர் தூற்றட்டும்
வாழ்த்துவோர் வாழ்த்தட்டும்
என்றபடியே சாலையை கடக்கும்
நாகரீகம்

பாண்டிய ராஜ்

எழுதியவர் : பாண்டிய ராஜ் (10-Aug-16, 10:49 pm)
சேர்த்தது : பாண்டிய ராஜ்
Tanglish : nagarigam
பார்வை : 148
மேலே