இரசிப்பதற்குதான் அழகு

மண்ணில் விளைந்த
பொன்னை அணிந்து
அழகு சேர்க்கும் - பெண்ணே!

உன்னை ஒருவன்
இரசிக்காதிருந்தால்...
அவனுக்கில்லை - கண்ணே!

இளம் கவிஞன் - எனக்காய் ...
விளைந்து நிற்கும் செந்தமிழை...
விலை மகள் என்பதா?

ஐயகோ!

இதயம் மட்டும் இருந்தால் உனக்கு
போதுமா மனிதா?

அதில் கொஞ்சம்
இரக்கம் இல்லையென்றால்...
மனிதனாக முடியாது - உன்னால்...!

உன் கண்ணுக்கு தெரியும்
பெண்கள் எல்லாம்
விலைமகள் என்றால்...

உன் அக்காவும், தங்கையும்...
மற்றவன் கண்ணுக்கு
எப்படி தெரிவாள்?

ஈன்ற தாயை உனக்கு
மதிக்க தெரியாத போது...

நீதான் இன்னும்
வாழலாமா இங்கு?

பெண்ணை
இரசிப்பதில் ஒன்றும் தவறில்லை நண்பா...!

இரசித்த பெண்ணையெல்லாம்...
ருசிக்க நினைப்பது தவறுதான்...!

விருப்பமின்றி - ஒரு பெண்ணை
கனவில் நினைப்பது கூட பாவம்தான்!

எழுதியவர் : கிச்சாபாரதி (10-Aug-16, 10:39 pm)
பார்வை : 106

மேலே