இன்பக் காதல்

இரும்பை உருக்கும் -தீ

என் நெஞ்சை ஈர்க்கிறாய்...நீ

உன் பார்வையோ - தீ

இளவம் நெஞ்சை எரிக்கிறாய் - நீ!

இணை பிரியாதிருந்தால்...

வாழ்க்கைக்கு
புதுவழி அமைக்கும் - காதல்!

ஒருவரை விட்டு
ஒருவர் பிரிந்தால்...

உயிர் உள்ள மட்டும்
வலி கொடுக்கும்...

அவை கவிதையில்
இடம் பிடிக்கும்...!

புது வழி தருமோ - இன்பக் காதல்?!
உயிர் வலி தருமோ - இந்தக் காதல்..?!

எழுதியவர் : கிச்சாபாரதி (10-Aug-16, 10:15 pm)
பார்வை : 123

மேலே