யான் நோக்கும் இரு நோக்கு

யான் நோக்கும்
இரு நோக்கு
அறியாது - நீ இருந்தால்...

காதல் பிணி அறியாத
குழந்தைதான் - நீ!

நீ மட்டும் காண
மலர்ந்த இந்த மலரை....

தினம் பார்த்து இரசிக்காமல்
இருப்பதேன் - உன் கண் ?

மன(ண)ம் இருந்தும்
மயங்காமல் இருப்பது - ஏன்?

மாற்றன் தோட்டத்து மல்லி அல்ல -நான்..!

குச்சுக் கட்டி
தள்ளி வைத்து
பாதுகாப்பதேன்?

நான் இன்று
பெரிய மனிசியாய்
ஆனதினால்தானே...

(ஆசை) இல்லையா...
என்னிளம் தாய் மாமனே?
என் மீது உனக்கு!

எழுதியவர் : கிச்சாபாரதி (10-Aug-16, 9:59 pm)
பார்வை : 126

மேலே