முள்ளின் முனையும் உந்தன் விழியும்
முள்ளின் முனையும்
உந்தன் விழியும்...
ஒன்றல்லப் பெண்ணே!
ஆறாத காயம்
நீ தந்த பின்னே!
முள் என்ன முள்?
உன் பார்வைதானே ...
தினம் எனைக் கொல்லும் -வில்...!
என்னை பார்க்கும் போதெல்லாம்
புன்னகை பூ பூக்கின்றாய்...
மொழி ஏதும் பேசாமல்...
ஊமையாய் நீ நடிக்கின்றாய்...
எந்நாளும்
மெளன விரதம் நீ இருந்தால்...
என்னாகும் என் வாழ்க்கைதான்...?
நெஞ்சில் அதிகரிக்காதோ?
ஆசைதான்...!