சாயும் காலம்

கண்ணில் கண்ட கன்னியெல்லாம்
காதலிக்க துடித்தேன்...

கவிஞன் ஆனதினால்...
கழுதையையும் இரசித்தேன்...
கண்ட படி கவிதை பல வடித்தேன்...!

காதலி ஒருத்தி கிடைக்காததினால்...
சாயங்காலத்தையே வெறுத்தேன்...!

நிலவில்லா வானத்தைக் கண்டு
அம்மாவாசை இருளில் அமர்ந்து
என்னத்தைக் கண்டு மகிழ்ந்தேன்...!

என் வாலிபம் மட்டும்
ஏனோ இன்று வீணாகிப் போனது..?
என்று நினைத்த போது...

அழகே! என்னாசை நிலவே!

உந்தன் வரவால்...
என் வாழ்வும் இன்று
இன்பமயம் ஆனது...!

சாயங்காலம் என்பது
சாயும் காலம் ஆனது...

இன்ப சாயுங்காலம் சந்திப்பிற்காகதான்
ஒரு ஆணும் பெண்ணும்
மணமேடைதனில் ஏறிடவே...
ஆசையோடு காத்திருக்கிறார்கள் போலும்...

தாமதத்தின் தவிப்பு என்பது
முதலிரவுக்கு மறு நாளே...
பிரசவிக்கும் குழந்தைதானே - அது!
அதற்கு மேலேயும் சொன்னால்
அது புனிதம் ஆகாது...!

எழுதியவர் : கிச்சாபாரதி (10-Aug-16, 11:08 pm)
Tanglish : sayum kaalam
பார்வை : 112

மேலே