கவனியுங்கள்

சூழ்ச்சி வலைக்குள் சிக்கிய
சூழ்நிலைக் கைதிகளாய்..

அடிபட்டு அடிமைபட்டு
தனக்கான வாழ்வினை -தினம்
பிறருக்காக தானம் செய்தும்
கவனிக்கப்படாத வேர்களாய்...

மண்ணில் புதைந்து கொண்டு இருக்கும்
ஏழை விவசாயிகளுக்காக...

காலம் தவறாமல்....
கண்ணீர் சிந்திய முகில்களும்...
பணக்காரர்களோடு - இன்று
கைக்கோர்த்துக் கொண்டது போலும்...

இல்லையென்றால்...
அவர்களோடு இணைந்து
வந்து கண்டுக்காமல் சாகடிக்குமோ...?

எழுதியவர் : கிச்சாபாரதி (10-Aug-16, 11:19 pm)
Tanglish : kavaniyunkal
பார்வை : 65

சிறந்த கவிதைகள்

மேலே