வித்தைக்காரன்

அழகைக் கண்டான்
பல கவிதை வடித்தான்...

நெஞ்சில் நின்றான்
நினைப்பைக் கொடுத்தான்...

தினம் நெறுங்கி வந்து
உடலை நெகிழச் செய்தான்...

வளைந்து
நாணி நின்ற வானவில்லை
கையில் எட்டிப் பிடித்தான்...

எதிர் பார்த்திருந்த
எந்தன் காதோரம் வந்து
காதல் கவிதை படித்தான்...

மெளனம் கொண்ட என்னிதழை
இன்று ஏனோ முணங்க வைத்தான்...

நாணும் மங்கையை
எழில் வான மங்கையை
பிடிபிடியென எட்டிப் பிடித்தான்...

இடை முல்லைக் கொடியினை
நிமிர்க்க நினைத்தான்...

தேன் சொட்ட பேசி
என்னாசையைக் கூட்டி
இளம் பெண் நாணத்தைப் போக்கி
மன்மத வித்தையைக் காட்டினான்...

அவனிடத்தில் கற்றுக் கொண்டதை
எப்படி வெளிப்படுத்துவேன் -நான்..!

அவன் விதைத்ததென்னவோ காதல்தான்
ஆனால் அங்கே முளைத்ததென்னவோ காமம்தான்

கதம்பத்தைத் தொடுத்தான்
சரவெடியாய் வெடித்தான்
துடியாய் துடித்தேன்...
அவன் இடியாய் இடித்தான்
இளமைக் கால மழையைப் பொழிந்தான்...
உச்சி முதல் உள்ளம் வரை நனைத்தான்

நீண்ட நாள் தாகத்தை
இன்றுதான் தணித்தான்...

போர்களத்தில் புகுந்து
கோடி சுகத்தைக் கொடுத்தான்...!

விடிந்தது இரவு...இன்னும் முடியவில்லை உறவு!

எழுதியவர் : கிச்சாபாரதி (11-Aug-16, 8:11 pm)
பார்வை : 134

மேலே