சக்தியும் புத்தியும்

குட்டியின் குட்டி கதை..
பொதிகை மலை சாரலில் இன்பமாய் இரண்டு குருவிகள்.. ஒரு ஆண் குருவி.. ஒரு பெண் குருவி.. ஒன்றின் மேல் ஒன்று அளவு கடந்த அன்பு வைத்திருந்தது.. சில்லென்ற காலை பொழுது.. இரண்டு குருவிகளும் மலை அருவியில் நீராடி முடித்து விட்டு இறை தேட சென்றது.. அங்கே பருந்து ஒன்று இரைக்காக வட்டமிட்டு கொண்டிருந்தது.. இரண்டு குருவிகளும் சந்தோசமாய் விளையாட்டுடன் இறை தேடியது.. பருந்தை பார்த்ததும் இரண்டு குருவிகளும் சிறகடித்து பறக்க தொடங்கின.. பெண் குருவி பருந்திடம் மாட்டிக்கொண்டது.. பெண் குருவிமேல் அதிகம் அன்பு வைத்திருந்த ஆண் குருவி பெண் குருவியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நினைத்தது.. பருந்தை எதிர்த்து போராடி காப்பாற்ற தன்னால் முடியாது என்பதை உணர்ந்து ஆண் குருவி தனது புத்தி கூர்மையால் மட்டுமே வெல்ல முடியும் என்று பருந்தின் முன் போய் நின்றது.. பருந்திடம் ஆண் குருவி சொன்னது.. என்னையும் என் மனைவியான பெண் குருவியையும் தின்றால் மட்டும் உன் பசி அடங்கி விடுமா என்று கேட்டது.. தீராது என்றது பருந்து.. உன் பசி தீரும் அளவிற்கு என்னை விட மூன்று மடங்கு அதிகம் உள்ள இரையை காண்பிக்கிறேன்.. எங்களை விட்டுவிடு என்றது.. பருந்தும் ஒப்புக்கொண்டது.. ஆண் குருவி ஒரு மரத்தின் உச்சியில் தொங்கி கொண்டிருந்த பெரிய தேன் கூட்டை காண்பித்து அந்த கூட்டிற்குள் தான் அந்த இறை உள்ளது எடுத்து கொள் என்றது.. உடனே பருந்து பெண் குருவியை விட்டுவிட்டு தேன் கூட்டை நோக்கி சென்றது.. இரண்டு குருவிகளும் வேறொரு மரத்தின் மீது அமர்ந்து கொண்டு பார்த்து கொண்டிருந்தது.. பருந்து தேன் கூட்டை கலைத்தவுடன்.. தேனீக்கள் பருந்தை மொய்த்து கொண்டது.. தேனீக்கள் கொட்டியதால் அதன் நஞ்சில் உயிர் விட்டது பருந்து.. அதன் பிறகு இரண்டு குருவிகளும் மீண்டும் புத்துணர்ச்சியுடன் தன் இரையை தேட தொடங்கியது..
என்ன தான் நம் எதிரி பலமா இருந்தாலும்.. கத்தி கூர்மையால் வெல்ல முடியாததை உணர்ந்து புத்தி கூர்மையால் வென்று காட்டியது தன் அன்பிற்காக..
வெற்றி பெற வெறும் வீரம் மட்டும் இருந்தால் போதாது.. அன்பும் கொஞ்சம் அறிவு இருந்தாலே போதும்.. வெற்றி உன் தோளில் மாலையாய் விழும்.. என்றும் அன்புடன் அனாதையாய்..
குட்டி..!!

எழுதியவர் : குட்டி (11-Aug-16, 10:08 pm)
சேர்த்தது : நாகரீக கோமாளி (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 564

மேலே