அவளே என் தொடுவானம்

வாழத் தெரியாமல்
வாழ்ந்து முடிக்கிறேன்

தூரிகை யின்றியே
ஓவியம் வரைகிறேன்
எழுதுகோ லின்றியே
கவிதை யெழுதுகிறேன்

காகித மின்றியே
கடித மனுப்புகிறேன்
வாசங்களைத் துரத்திவிட்டு
வண்ணங்கள் ரசிக்கிறேன்

உறவுகளைவிட அதிகம்
உன்னோ டிருக்கிறேன்
உனையே யென்றன்
உயிரென் றணைக்கிறேன்

கட்டைக ளின்றியே
மெல்லி சைக்கிறேன்
மட்டை யின்றியே
பந்தா டுகிறேன்

தூக்கத்திலு முன்மேல்
தூங்கி வழிகிறேன்
தொடுவா னாயுனைத்
தொழுது யெழுகிறேன்

தொட்டுத் தொட்டுத்
தோள்பல மிழக்கிறேன்
தொடத்தொட மயக்கும்
தொடுதிரைக் கணினியே ...

அலாவு தீனுக்கு
பூதம் அடிமை
அறிவியல் பூதமே --உனக்கு
நான் அடிமை !

*
கவித்தாசபாபதி

எழுதியவர் : கவித்தாசபாபதி (12-Aug-16, 12:54 am)
பார்வை : 129

மேலே