அவள் தான்

அவள்
இதயம் துடித்தால்
நான்
உயிர் வாழ்வேன்

அவள்
புசித்தால்
நான்
பசி ஆறுவேன்

அவள்
மூச்சு விட்டால்
நான்
சுவாசித்திருப்பேன்

அவள்
இல்லை எனில்
நான்
இல்லை

அவள்
தான் அம்மா
நான்
அவளின் கருவறையில்..............

எழுதியவர் : ப்ரீத்தி (11-Aug-16, 11:12 pm)
Tanglish : aval thaan
பார்வை : 69

மேலே