பனித்துளியும் முகப்பருவும்

பளபளக்கும் பட்டான ரோஜா மலரில்
படர்ந்துதான் இருந்தனவே பனித் துளிகள்

பனித்துளிகள் அழகினில் மகிழ்கையிலே
பருவமங்கை பளிச்சென்ற கன்னத் திலே

கன்னத்தின் பருக்கள்தான் வந்தனவே
கன்னத்திலே இட்டதொரு முத்தத்தை

முத்த்த்தின் களிப்பினில் முழ்கையிலே
மேகத்திரை நீக்கியே நீள்கதிரோன்

நீள்கதிரால் பனித்துளியை தழுவலானான்
தழுவிக்கொண்ட அந்நேரம் நெஞ்சினிலே

நெஞ்சமதின் மஞ்சத்தின் நேரிழையாள்
நினைவுக்கு வந்தேதான் வாட்டுகின்றாள் !

வாட்டுகின்ற வேதனையை தீர்த்திட வே
வண்ண பனித்துளியை வாரியணைத்தென

வாரியணைக்க வந்திடுவாள் நேரிழையாள்
வழிநோக்கி விழியைத்தான் ஓடவிட்டேன்!

கே. அசோகன்

எழுதியவர் : கே. அசோகன் (12-Aug-16, 1:18 pm)
பார்வை : 220

மேலே