இதயம்

தேன் கூட சுவைக்கவில்லை
உன் இதழ்களில் முத்தமிட்ட
போது...

தேனீக்கள் கொட்டிய போது
கூட வலியில்லை...
வலித்தது உன் இதயத்தில்
நான் இல்லை என்றபோது...

உடலில் உயிர் இருந்தும்
உணர்வற்று நடமாடுகிறேன்...
உன் இதயம் இன்னொருவனை
சுமக்க...

என் இதயம் மட்டும் உன்னை
சுமக்கிறதே...
உன்னை மறந்தால் என்
இதயம் துடிப்பதை மறந்து
விடும்...

எழுதியவர் : பவநி (12-Aug-16, 10:09 am)
Tanglish : ithayam
பார்வை : 208

மேலே