எங்கிருந்து என்னை காண்கிறாய்

எங்கிருந்து என்னை காண்கிறாய்!!!!!
அழும்போது தோள்கொடுக்கிறாய்
விழும்போதோ மடி கொடுக்கிறாய்
உன்னை காணாது நான் இருந்தும்
அன்பாலே என்னை அணைக்கிறாய்.....

பூ ஒன்றை தொடுவதை போலே
நான் உணராமலே என் கரம் தொடுகிறாய்....
பார்வையிலே காணும் அழகை
ரசிக்காமல் என் உள்ளம் பார்க்கிறாய்.....
சோர்க்கையிலே மழையென வந்து
ஆழ்மனதை இதமாக நனைக்கிறாய்....

எதற்க்காக இத்தனை அன்போ?
உனக்கென ஏதும் நான் செய்திலாபோதும்
எதற்காக இத்தனை அன்போ?
உன்னை கரம்கூப்பி தொழாத போதும்....
எதற்க்காக இத்தனை அன்போ?

எதற்காக இருந்தாலும் என்
பேர் தெரியா தாயாக என்னை
தாங்கும் என் எல்லாம் நீ....
புரியாத புதிராக இருந்தாலும் என்
வாழ்வினில் வந்த வெளிச்சம் நீ.....

இருந்தும் என் பதில் தெரியா கேள்வியெல்லாம்
நீ எங்கிருந்து தான் என்னை காண்கிறாய்???

எழுதியவர் : இந்திராணி (12-Aug-16, 1:23 pm)
பார்வை : 149

மேலே