தாய்மை

படம் பார்த்து கவிதை
படைக்க கையில் எடுத்தேன்
மை சொட்டும் எழுதுகோலை

தாய்மை என தலைப்பிட்டேன்
எழுதும் முன் சிந்தனையில்
அசைபோட்டு பார்த்தேன்

கையில் இருந்த எழுதுகோல்
அப்படியே இருந்தது ஆனால்
படைத்துவிட்டேன் கவிதை

வார்த்தைக்கும் வர்ணனைக்கும்
அகப்படாத உறவு தாய்மை
மன்னிக்கவும்

என கவிதைக்கு ஒரு
முற்றுப்புள்ளி வைத்து
அழகாய் முடித்தேன்

பாண்டிய ராஜ்

எழுதியவர் : பாண்டிய ராஜ் (12-Aug-16, 8:16 pm)
சேர்த்தது : பாண்டிய ராஜ்
Tanglish : thaimai
பார்வை : 460

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே