ஆனந்தமாய்க் காதல் செய்வீர் !
காதலும்
கண்ணீரும்
கருவறை
நண்பர்கள்.
சேர்ந்தே
பிறக்கும்
சேர்ந்தே
இருக்கும்.
கண் வழி
நுழையும்
காந்தக்
காதல்
அவ்விழி
திரும்பும்
கண்ணீராக.
சில பல
வேளையில்
வென்று
சிரிக்கும்
ஆனந்த
நீராக.
வாழ்வின்
அடிநாதம்
காதல் தானே
ஆகையினால்
காதல்
செய்வீர்
அதி ஆழமாக.