மழை

மேகத்தின் மோகம் தீர்த்து
மண்ணின் மோகத்தால்
கீழ் விழுபவனே!
வெப்பத்தை ஈரமாக்குபவனே!
மக்களின் பசிப்போக்குபவனே!
தாகம் தீர்ப்பவனே!
மண்ணில் வருகையில்
ஆயிரக்கணக்கான சுருதி கொடுப்பவனே!
குழந்தைகள் நனைய ஆசைப்படுபவனே!
நீர்நிலையங்களுக்கு
உயிர் கொடுப்பவனே!
உனது சிறப்பை உணரமுடிகிறது!
அதனை கூறமுடியவில்லை!
நீயே பெருமையின் உச்சம்!
கூறுவதற்கு எதற்கு எனக்கு அச்சம்!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (14-Aug-16, 7:57 am)
Tanglish : mazhai
பார்வை : 330

மேலே