புரியாத புதிர்

புரியாத புதிர்
==============
புரியாத புதிர்
முதலில் புதிர் போடும்
பின் விளையாடும்
அதன் பின் மகிழ்விக்கும்
அடுத்த கணமே அழவைக்கும்
அதற்கடுத்த கணம்
என்ன செய்யுமென்று
யாருக்குத் தான் தெரியும்
பின் முடிச்சை அவிழ்க்கும்
புதிர் விளங்கும்
பின் புது புதிர் பிறக்கும்
புரியாத புதிராகும்
புதிருக்கு புதிராகும்
மீண்டும் புதிர் பிறக்கும்
~ பிரபாவதி வீரமுத்து