அப்பாடா

நான் பாராட்டை எதிர்பார்ப்பவள்
ஆனால் பொய் புகழ்ச்சியை
எதிர்பார்ப்பவள் அல்ல
என்னிடம்
குறை இருந்தால்
நண்பனை போல்
தலையில் கொட்டி
சொல்லுங்கள்
திருத்திக்கொள்கிறேன்
சரியென்றால்
தட்டிக்கொடுங்கள்
நான் செய்வது தான் சரியென்று
இருந்துவிடாதீர்கள்
எனை கேள்விகள்
ஆயிரம் கேளுங்கள்
என் பிழையை சுட்டிக் காட்டுங்கள்
நண்பன் தவறு செய்தால்
தட்டிக்கேட்பவன் தான்
உண்மை நண்பன்
அவன் பாதையை நல்வழிப்படுத்துபவன் தான்
உண்மை நண்பன்
வெற்றியில் தட்டிக்கொடுத்து
ஊக்கப்படுத்துபவன் தான் உண்மை நண்பன்
நண்பன் என்றாலே
உண்மை தான்
ஆனால் இன்றைய
கால கட்டத்தில்
நண்பனுக்கே
ஓர் அடைமொழியை
தர வைத்துவிட்டான்
மனிதன்
செதுக்கினால் தான் சிலை
அடித்தால் தான்
அலை
கொதித்தால் தான்
உலை
பண்படுத்தினால் தான்
பாதை
போலியான புன்னகை
வேண்டாம்
உண்மையான
அக்கறையுள்ள கோபம் போதும்
பொய் புகழ்ச்சி என்பது
தொடர்கதை போகும்
தொலைக்காட்சி போல்
மனது விரும்பும்
ஆனால் அதனால்
நாம் முன்னேற முடியாது
உண்மையான அன்பினால்
வரும் கோபம்
வயலும் வாழ்வும் போல்
விரும்பமாட்டோம்
ஆனால் அதனால்
ஆயிரம் நன்மை கிடைக்கும்
வாழ்வு முன்னேறும்
யாரிடமும் நடிக்காதீர்கள்
நண்பனாய் இருங்கள்
சரியா
சரி
தவறா
தவறு
வெளிப்படையாக
வாழுங்களேன்
ஏன் ?
காரியம் ஆகவேண்டுமென்று
காக்கா பிடிக்காதீர்கள்
புகழ்ச்சிக்கு மயங்காதே...
பாராட்டுங்கள் மனம்
குளிர பாராட்டுங்கள்
நன்றி தெரிவியுங்கள்
அகத்திலிருந்து
தலை வணங்கி
நிசம் எது
நிழல் எது
அறிந்து நடந்துகொள்ளு
மனிதா
மனிதனாக வாழ்
உண்மையாக வாழ்
நடிப்பதற்கு அவசியமில்லை
அத்தியாவசியம்
மனிதநேயம்
அன்பின் மொழி
புன்னகை மட்டுமல்ல
கோபமுமே
அன்பு எது
வேடம் எது
அறிந்து நடந்துகொள்ளு
மனிதா
மொத்தத்தில் வெளிப்படையாக இரு
இதைச் சொல்லத் தான்
இவ்வளவு சொன்னேன்
அப்பாடா!
~ பிரபாவதி வீரமுத்து