கல்லறை

கல்லாகத்தான் வைத்திருந்தேன் இதயத்தை!
ஆனால்
வில்லாக வளைத்து விட்டாய்!
சொல்லாமல் தான் வைத்திருந்தேன் காதலை!
ஆனால்
கொல்லாமல் கொன்று விட்டாய்!
பேசாமல் தான் நின்றிருந்தேன்!
ஆனால்
பாசாங்கால் சிரிக்க வைத்தாய்!
நில்லாமல் சென்றிருப்பேன்!
ஆனால்
உள்ளத்தை கரைத்து விட்டாய்!
உன் அறையில் இருந்திருப்பேன்!
ஆனால்
கல்லறையில் உறங்குகிறேன்!
இறவாமல் இருந்திருப்பேன்!
நீ என்னை
கடவாமல் இருந்திருந்தால்!

எழுதியவர் : நிலா ரசிகன் (26-Jun-11, 3:36 pm)
பார்வை : 434

மேலே