பெற்ற சுதந்திரம்
சுதந்திரத்தை பெற்றோம் ..,
சுய நலத்தை கொண்டோம் ..,
சுதேச நாட்டில் இன்றும் ..,
பரதேசியாகவே ..,
வாழ்கின்றோம் .
ஜனநாயகம் என்பது ..
காணாமல் போனது ..
ஜனங்களின் நிலைமை ..
கேள்வி குறியானது .
லஞ்சம் ஊழல் ..,
பெருத்து போனது .
ஏழை மக்களின்
வாழ்வில் ..
பஞ்சம் மட்டும்
நிலைத்து
போனது .
அறநெறிகளை மறந்து
அரசு இருக்க ..,
அரிசியில் கூட
கலப்படம் .
சுதந்திரத்தை பெற ..,
பட்டினி இருந்தோம் .
இன்று ..,
பெற்றும் பட்டினி ..
இருக்கிறோம் .
மாற்றம் ஒன்றே மாறாதது ..