ஆழ்ந்த இரங்கல்
================
பாமாலை கோர்த்து பரப்பிய தமிழ்மணம்
பாதியிலே நின்றிட படைத்தவன் சதியினால்
காமாலை கொண்டுயிர் காலனும் பறித்தான்
கண்ணீரில் குளித்திடும் நிலவரம் கொடுத்தான்
பூமாலை போட்டவள் பொட்டினை அழித்த
பொல்லாதக் கூற்றுவன் கருணையில் லாதவன்
நா.முத்துக் குமாரென்னும் நல்லதோர் கவிஞனே
..நானிலத்தில் மரணம் உனக்கில்லை போய்வா....
நின்னாத்மா சாந்திபெற பிரார்த்தனைகள்
அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்