அண்ணன் தம்பி
அன்னியனே வெளியேறு
அடிமைப்பட்டது போதும்
நாம் ஆள வேண்டும்
நமக்காக நம் நாட்டுக்காக
ஆண்டது போதும் அகன்று விடு
ஆள்வது எம்கையில்
அடித்தாலும் பிடித்தாலும்
அண்ணன் தம்பி நாங்கள்
என்றோம் வென்றோம்
இன்று தெரிகிறது
ஏன் இந்த வெற்றி என்று
சு என்றால் நல்ல
தந்திரம் என்றால் சிக்கல் என்று
புரிந்து தான் வாழ்கின்றோம்
முட்டாள்கள் நாம் என்று
உலகம் புரிந்து கொள்ளட்டும்
தன்னைப் புரிந்து கொள்ள
தகுதியில் நாம் இல்லை என்று
இருந்தும் வாழ்த்துவோம்
சுதந்திரம் பெற்றுக் கொடுத்த
இந்திய பெரு மக்களை தலைவர்களை
அவர்களை வாழ்த்தும் புண்ணியம் ஆவது
நம் தலைமுறை காத்திடட்டும்