கவிதை ஒன்று ஓவியமானது

கவிதை ஓன்று ஓவியமாகிவிட்டது!..
உலகை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த என்னை என்னுள் வேடிக்கை பார்க்க வைத்த கவிஞன்.

வேடிக்கை பார்க்க விட்டுவிட்டு, எதையோ வேடிக்கை பார்க்க சென்று விட்டானோ?
காரிய காரன் அவன் மட்டும் சாதித்து விட்டு போய்விட்டான்.

பச்சையப்பனில் இருந்து வந்த வணக்கம்...
நன்றி சொல்ல மறந்து விட்டு சென்றுவிட்டது!

உன் அப்பா உனக்கு அறிமுக படுத்திய நிலவை, உன் மகனுக்கு காட்டி விட்டு சென்றுவிட்டாய். அந்த முழு நிலவு வந்து உன்னை எங்கே? என்று கேட்டால்? என்ன சொல்வது.....

கவிதையாய் இருந்தவன் ஓவியமாகி விட்டானே.!
கலை உலகிற்க்கு ஓர் முத்து சிற்பி நீயே..

எழுதியவர் : கார்த்திக் ஜெயராம் (15-Aug-16, 7:40 am)
பார்வை : 534

மேலே