விதவையின் குமுறல்
விதவைக்கு இல்லையோ இனி வாழ்க்கை...
வாழ்க்கை வாழத்தானே...
அவளும் இப்புவியில் வாழத்தானே
பிறந்தாள்...
மணவாளன் மடிந்தால்
அவளுக்கு என்ற ஒரு
மனம் இல்லையா...
அவள் எங்கே செல்வாள்
விதவை கோலம் பூண்டு
மூலையில் முடங்கதான்
பிறந்தாளா இவ்வுலகில்...
ஆண்களுக்கு இந்த உலகம்
சொர்கம்
அவளுக்கு என்ன இந்த உலகம்
நரகமா?
ஏன் விதவை மணக்க
கூடாது?... அவளிடம்
கற்பு இல்லை என்பதாலோ...
கற்பு என்பதை உடம்பில் பார்க்காதே
மனதில் பார்...
ஆசை நாயகியாக்கி கொள்ள
வேண்டும் ஒரு விதவை...
வேண்டாமா மணக்கோலம் கண்டு
ஆசை மனைவியாக்கி கொள்ள...
பெண்ணழகு உடலில் இல்லை
அவள் அகத்தில் தான்...
விதவை அழத்தான் வேண்டுமா
பழைய வாழ்வை நினைத்து...
மறுமணம் செய்து வாழ
கூடாதா...
எதையும் சுயமாக செய்யும்
ஆண்களே துணையின்றி வாழ
தயங்கும் காலத்தில்...
விதவை பெண் ஏன்
கூடாது மறுமணம்...
துணையில்லாமல் வாழ
வழியில்லாத பெண் மட்டும்
துணையின்றி வாழ வேண்டுமா...
அநியாயம்...
விதவை மறுமணம்
இல்லை குற்றம் தூக்கு
மேடைக்கு அனுப்ப...
ஊர்வாய் இருக்கிறதே
ஏற்றிவிடும் அவளை
உயிரோடு இடுகாட்டுக்கு...
சுயநலம் வேண்டாம்...
கைகொடுப்போம் வாழ்க்கை
எனும் கடலில் நீந்த
தெரியாமல் தத்தளிக்கும்
விதவை பெண்களுக்கு...