தாய்நாடே

நாடோடி வாழ்க்கை
நடத்திய உலகத்தார்
மத்தியிலே
அரசனாய் வாழ்ந்த வம்சம்
அடிமைப்பட்டு கிடந்தது
காரணம்
பயம் அல்ல:
நம்பினோர் கைவிடப்படார்!
உலகிற்கே முன்னோடி
கல்வி; கலாச்சாரம்;
பண்பாடு; வழிபாடு;
வீரம்; தியாகம்;
தொழில்நுட்பம்;
இன்னும் பல..
வணங்குகிறோம் முன்னோர்களே!
தலைமுறை தாண்டிய
தன்னிகரற்ற தனிநாடு..
பெருமைகொள்வோம்!
உலகிற்கே வழிகாட்டிய
உன்னத திருநாடு..
கர்வம்கொள்வோம்!
எல்லாவற்றிலும்
புதுமை கண்ட
ஏற்றமிகு சீர்நாடு..
களியாட்டம் போடுவோம்!
எதிரி என்று யாரும் இல்லை
மௌனத்தில்
எச்சரிக்கை விடுத்தோம்
எதிர் நின்ற யாரையும்
அவமதிக்கவில்லை
அன்போடு அரவணைப்போம்!
உலக அரங்கில் தனியிடம்
மற்ற நாடுகள்
முன் வந்து வழங்கியது
பெருமையிலும் பெருமை!
வணங்குகிறோம் தாய்நாடே!