ஸ்ரீதர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஸ்ரீதர் |
இடம் | : செஞ்சி |
பிறந்த தேதி | : 26-Jun-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 143 |
புள்ளி | : 11 |
கவிதை வாசகன்...
தமிழ்த்தாயை மதித்தெழுந்து தலைவணங்க மறுத்தமர்ந்தார் !
சமற்கிருத எழுத்துன்றன் சிறந்ததமிழ் மொழிக்கெதற்கு?
கவிஞர் இரா. இரவி
தமிழ்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்க மறுப்பவர்களுக்கு
தமிழகத்தில் இடமில்லை வெளியேறி விடுங்கள்!
உலகமொழிகளின் தாய்மொழியின் வாழ்த்திற்கு
உமக்கு நிற்க மனமில்லை என்றால் சென்று விடு!
தியானம் செய்ததாக பொய்யுரைக்கும் நீயா சாமியார் ?
தேசியகீதத்திற்கு மட்டும் தியானம் கலைத்து விட்டாய்!
நமஸ்காரம் என்பதை விட்டொழியுங்கள் நாளும்
நல்ல தமிழில் வணக்கம் என்று கூறி மகிழுங்கள்!
விவாகம் என்ற சொல்லை விட்டுவிடுங்கள்
வளமான தமிழில் திருமணம் என்று சொல்லுங
கண்ணில் தென்பட்ட
இடமெங்கும்
கட்டியாண்ட தமிழன்,
காலத்தின் சூழ்ச்சியால்
கடைக்கோடி மனிதனாய்!
பூமியின் பூர்வக்குடி
களையும், கல்வியும்,
கலாச்சாரமும்,
நடைமுறையும், நாகரீகமும்
உவந்தளித்த
உன்னதத் தமிழன்!
அழிக்கப்பட்ட
தன் வரலாறுகளையும்,
மறுக்கப்பட்ட
தன் அறிவியலையும்,
வெறுக்கப்பட்ட
தன் வீரத்தையும்,
சற்றே திரும்பிப் பார்க்கத்
தொடங்கியுள்ளான்.
தன்னிலை அறிந்து,
சூழ்ச்சிகள் உணர்ந்து,
மொழியாலும் இனத்தாலும்
பெருமைகொள்கிறான்!
ஒரு இனத்தின்
வளர்ச்சி
மொழியின்பால் தோன்றும்.
எம்மொழி
எம் இனத்தை
அறியனையேற்றும்!
சாட்சிகள் ஆயிரம்
வரலாறு சொல்லும்,
நிச்சியம
முடியாது என்பதை
சொல் அளவிலும்
மறந்திடும்!
கடல் மீது போகும்
காற்று
அலைகள் மோதி
திரும்புவதில்லை!
எதையோ எட்டிப்பிடிக்க
என்னும் அலைகள்,
பலமுறை தோற்றும்
ஓய்வதில்லை!
பளுவை தூக்கி
தள்ளாடுபவன்
பலசாலி அல்ல.
நிகழ்காலத்தின்
சிறந்த தருணங்கள்
நாளைய வரலாறு !
இன்று
நீ போராடும்
ஒவ்வொரு நிமிடமும்,
நாளைய
அமைதியான வாழ்வுக்கு
வழி !
நேரத்தை நிறுத்த
யாரும் இல்லை.
உன்னை தடுக்க
யாரும் இல்லை .
விதியென வாழ்ந்த
யாரும் வாழ்வதில்லை
இறந்தும்;
விதியை உடைத்திடு
இறந்தும் வாழ்ந்திடு !
தயார்படுத்திக்கொள்
உன் கால்களை
நீ பிறந்தபோதே
தயாராகிவிட்டது
உனக்கான பயணம்!
வாழ்க்கை
எனும் பயணத்தை
வலிமையோடு கடந்திடு
வலியெல்லாம் மறந்திடு
உன்னை
தனிமைப்படுத்திக்கொள்
அது சொல்லும்
உன்னையும்,
உலகையும்.
விழிப்போடு இரு
உனக்கான பயணம்,
வழித்துணை தேடாதே
மயக்கம் வேண்டாம்
எதிலும்,
தயக்கம் வேண்டாம்
எதனாலும்.
தவறுகள் கண்டு
தளராதே,
எதிரிகள் கண்டு
மிரளதே.
உனக்கு நீயே
உற்ற நண்பன்!
உன்னிப்பாய் கவனி
உனக்கு நீயே
எதிரி!
கனவுகளோடு மட்டும்
கரையேறாதே,
வரலாற்றில்
கனவுகள்
காணாமல் போகும்.
இந்தநொடி
உனக்கானது
காலம் தாழ்த்ததே
தொடங்கிடு
உன் தனிமைகள்
யாரிடம்
பேச எண்ணும்..
உன்
மௌன மொழிகள்
யாருக்கு புரியும்..
உன்
கோபத்தை
யார் பொறுப்பர்..
உன்
கவலைகள்
நீ சொல்லாமல்
யார் அறிவார்..
உன்
கனவுகள்
யாரிடம் உறவாடும்..
உன்
வருத்தம்
யார் பிரிவில்..
உன்
வெட்கம்
யார் வருகையில்..
உன்
பொய்கள்
யாரிடம் யாருக்காக..
உன்
செல்ல சண்டைகள்
யாரிடம்..
உன்
உரிமைகள்
யாரிடம்..
உன்
ரகசியதகில்
யாரை அனுமதிப்பாய்..
உன்
அவமானங்களை
யாருக்காக பொறுப்பை..
உன்
பொய்கள்
யாரிடம்
பொய்த்துப்போகும் ..
உன் மனம்
நீ சொல்லாமல்
யாருக்கு தெரியும்..
உன்னுடைய யார்..
உன்னுடைய யார்?
தயார்படுத்திக்கொள்
உன் கால்களை
நீ பிறந்தபோதே
தயாராகிவிட்டது
உனக்கான பயணம்!
வாழ்க்கை
எனும் பயணத்தை
வலிமையோடு கடந்திடு
வலியெல்லாம் மறந்திடு
உன்னை
தனிமைப்படுத்திக்கொள்
அது சொல்லும்
உன்னையும்,
உலகையும்.
விழிப்போடு இரு
உனக்கான பயணம்,
வழித்துணை தேடாதே
மயக்கம் வேண்டாம்
எதிலும்,
தயக்கம் வேண்டாம்
எதனாலும்.
தவறுகள் கண்டு
தளராதே,
எதிரிகள் கண்டு
மிரளதே.
உனக்கு நீயே
உற்ற நண்பன்!
உன்னிப்பாய் கவனி
உனக்கு நீயே
எதிரி!
கனவுகளோடு மட்டும்
கரையேறாதே,
வரலாற்றில்
கனவுகள்
காணாமல் போகும்.
இந்தநொடி
உனக்கானது
காலம் தாழ்த்ததே
தொடங்கிடு