தயாராய் இரு

தயார்படுத்திக்கொள்
உன் கால்களை
நீ பிறந்தபோதே
தயாராகிவிட்டது
உனக்கான பயணம்!

வாழ்க்கை
எனும் பயணத்தை
வலிமையோடு கடந்திடு
வலியெல்லாம் மறந்திடு

உன்னை
தனிமைப்படுத்திக்கொள்
அது சொல்லும்
உன்னையும்,
உலகையும்.

விழிப்போடு இரு
உனக்கான பயணம்,
வழித்துணை தேடாதே

மயக்கம் வேண்டாம்
எதிலும்,
தயக்கம் வேண்டாம்
எதனாலும்.

தவறுகள் கண்டு
தளராதே,
எதிரிகள் கண்டு
மிரளதே.

உனக்கு நீயே
உற்ற நண்பன்!
உன்னிப்பாய் கவனி
உனக்கு நீயே
எதிரி!

கனவுகளோடு மட்டும்
கரையேறாதே,
வரலாற்றில்
கனவுகள்
காணாமல் போகும்.

இந்தநொடி
உனக்கானது
காலம் தாழ்த்ததே
தொடங்கிடு

இலக்கை
தீர்மாணிக்கதே
பயணத்தை
முடித்துக்கொள்வாய்.

தோல்வியின் பரிசு
வெற்றி!
வெற்றியின் சிபாரிசு
தலைக்கனம்
வெற்றியை மதியதே
தோல்வியை மறவாதே

ஓய்வை எண்ணாதே
உறக்கம் செய்யாதே
உதவி நாடாதே..
நேரத்தை துரத்திடு
பயணத்தை தொடர்ந்திடு
வெற்றியை அடைந்திடு!

எழுதியவர் : ஸ்ரீதர் (2-Mar-18, 8:02 pm)
சேர்த்தது : ஸ்ரீதர்
Tanglish : tayarai iru
பார்வை : 178

மேலே