தமிழன் நாடாளும் நாள்

கண்ணில் தென்பட்ட
இடமெங்கும்
கட்டியாண்ட தமிழன்,
காலத்தின் சூழ்ச்சியால்
கடைக்கோடி மனிதனாய்!

பூமியின் பூர்வக்குடி
களையும், கல்வியும்,
கலாச்சாரமும்,
நடைமுறையும், நாகரீகமும்
உவந்தளித்த
உன்னதத் தமிழன்!

அழிக்கப்பட்ட
தன் வரலாறுகளையும்,
மறுக்கப்பட்ட
தன் அறிவியலையும்,
வெறுக்கப்பட்ட
தன் வீரத்தையும்,
சற்றே திரும்பிப் பார்க்கத்
தொடங்கியுள்ளான்.

தன்னிலை அறிந்து,
சூழ்ச்சிகள் உணர்ந்து,
மொழியாலும் இனத்தாலும்
பெருமைகொள்கிறான்!

ஒரு இனத்தின்
வளர்ச்சி
மொழியின்பால் தோன்றும்.
எம்மொழி
எம் இனத்தை
அறியனையேற்றும்!

சாட்சிகள் ஆயிரம்
வரலாறு சொல்லும்,
நிச்சியம் தமிழினம்
அதிகாரம் கொள்ளும்!

பெருமைகொள்வோம்
கர்வம் தவிர்ப்போம்
தமிழினம் ஆளும்போது
எம் இனத்தின்
எளிமையும் நேர்மையும்
மாறாது என
மார்தட்டிச் சொல்வோம்
இது எம்
தமிழினம் என்று!

எழுதியவர் : ஸ்ரீதர் (15-Mar-18, 10:21 pm)
பார்வை : 288

மேலே