நீயாக வாழ்ந்திடு

நீயாக வாழ்ந்திடு

முடியாது என்பதை
சொல் அளவிலும்
மறந்திடும்!

கடல் மீது போகும்
காற்று
அலைகள் மோதி
திரும்புவதில்லை!

எதையோ எட்டிப்பிடிக்க
என்னும் அலைகள்,
பலமுறை தோற்றும்
ஓய்வதில்லை!

பளுவை தூக்கி
தள்ளாடுபவன்
பலசாலி அல்ல.

நிகழ்காலத்தின்
சிறந்த தருணங்கள்
நாளைய வரலாறு !

இன்று
நீ போராடும்
ஒவ்வொரு நிமிடமும்,
நாளைய
அமைதியான வாழ்வுக்கு
வழி !

நேரத்தை நிறுத்த
யாரும் இல்லை.
உன்னை தடுக்க
யாரும் இல்லை .

விதியென வாழ்ந்த
யாரும் வாழ்வதில்லை
இறந்தும்;
விதியை உடைத்திடு
இறந்தும் வாழ்ந்திடு !

எழுதியவர் : ஸ்ரீதர் (15-Mar-18, 9:07 pm)
Tanglish : neeyaaga valnthidu
பார்வை : 370

மேலே