போராடு

தோழா உன் தடைகளை உடை
உன் தோலை நிமிர்த்து
உனக்கு விழுந்த அடிகளை மறக்காதே
மறந்தால் மீண்டும் எழ முடியாது
எழு உன் நம்பிக்கை கொண்டு
துவளாதே !
சோர்வு உனது சாத்தான் நீக்கிவிட்டு
உனக்கான புது விடியலை உருவாக்கு தோழனே
தோல்விகளை உனது படிக்கட்டுகளாக்கு
வெற்றி உன்னை தேடி வரும் வரை உழை
முள் உன்னை கூர் ஈட்டியாய் குத்தும்
கவலை கொள்ளாதே
போராடு துணிந்து போராடு
உன் கடமை செய்
எல்லாம் உன்னை தேடி வரும்
பேராசைகள் வைக்காதே உன்னை அடியோடு சாய்த்துவிடும்
துணிந்து போராடு தடைகளை உடைத்து
உனக்குள் போட்ட வேலிகளை அகற்று
உனக்குள் போட்ட வட்டத்தை தாண்டு தோழனே
வாழ்க்கையில் சாதிக்கும் வரை
இருள் அகலும் வரை
உனக்கான புது விடியல் வரும் வரை
போராடு ! போராடு !

எழுதியவர் : பிரகதி (13-Mar-18, 12:47 pm)
Tanglish : poraadu
பார்வை : 1207

மேலே