நம்பிக்கை நூல்
வெற்று மரத்தின் கீழ்
வேற்றுக்கிரக வாசிகளாய்
இன்னும்
எத்தனை நாட்களுக்கு
நமது பயணம்?
வெ(வ)றுமையின் பிடிக்கு
விருட்சங்கள் மட்டும்
விதிவிலக்கா என்ன?
இலைகளை இழந்து
ஏதிலிகளாய் நிற்கின்றன
ஓ விருட்சங்களே
உங்களுக்கு இலைகள்
எங்களுக்கு உறவுகள்
வனாந்தரமாக்கப்பட்ட பூமியில்
விடிகின்றன
ஒவ்வொரு பொழுதுகளும்
தூரத்தில் தெரிகின்ற
ஏதோவோர் நம்பிக்கையை
சுமந்தபடி
ஊரடங்கு இரவொன்றின் கிறுக்கல் - 2008