சுதந்திரம்
அந்நியர் பிடியிலிருந்து விடுபட்டு
சுதந்திரம் அடைந்தோம்
வருடங்கள் எழுபது இப்போது
நாம் சுதந்திரம் அடைந்து
இன்னும் இந்த கொடிய
ஜாதி-மத பிடியிலிருந்து
நமக்கு எப்போது கிடைக்கும்
சுதந்திரம் ?
அது எப்போதோ அப்போதுதான்
நாம் அடைந்தது பூரண சுதந்திரம்
காத்திருப்போம் அப் பொன்னாள்
எப்போது உதிக்கும் என்று