நமுத்துக்குமார் அமரர்
காலனே இது என்ன
உன் கோர தாண்டவம்
நல்லதோர் கவிஞனை
நாட்டிற்கும் வீட்டிற்கும்
தன உயர்ந்த கவிதைகள் மூலம்
அயராது எழுதிவந்த
எமது கவிஞனை முத்துகுமரனை
புகழ் என்னும் ஏணியில்
வெற்றிமேல் வெற்றி என்று
வெற்றி படிகளில் செல்லுகையில்
இந்த இள வயதில்
அவர் உயிரைப் பறித்து
எம்மை எல்லாம் ஆழ்ந்த தூக்கத்தில்
விட்டு சென்றது நியாயமா சொல்வாய் நீயே
அன்று இவ்வாறே மஹாகவி பாரதியாரை
அதன் பின்னே பட்டுகோட்டையாரை
உலகளவில் மஹாகவி கீட்ஸ் ,ஷெல்லி
என்று நல்ல கவிஞர்கள் உயிர்களை எல்லாம்
அற்ப வயதினிலேயே மாய்த்து விட்டாய்
காலதேவ போதும் இந்த வெறியாட்டம்
நல்ல மக்களை, புலவரை, புறவரை
பல்லாண்டு காலம் வாழவிடு
நாட்டிற்கு பல்லாண்டு தொண்டு
செய்ய விடு