நிலா காதல்

உன்னைப் பார்க்க ஓடோடி வருகிறேன்
என் வேதனையைத் தீர்க்க மாட்டாயாயென
என் குளிருக்கு நீ வேண்டும்
உன் உஷ்ணத்திற்கு நான் வேண்டாமா
உன் அனல் கட்டி அணைக்காதாயென
ஜென்ம ஜென்ம ஏக்கம்
உன் கதகதப்பில் என் இரவுகள் வாராதாயென
திங்களில் பதினைந்து நாட்கள் விரதமிருக்கிறேன்
மீத நாட்களில் உன்னைத் தேடி சுற்றுகிறேன்
என்மீது விருப்பம் இல்லையோ-இல்லை
ஊர் ரசிக்கும் என் அழகில் குறை கண்டாயோ
நீ சுடுவாய்யெனத் தெரிந்தும்
என் மன்னவனாய் உன்னை
அலங்கரித்துக்கொண்டது என் நெஞ்சம்
வேதனைகள் புரியவில்லையா என்னாளனே
இரவுகளில் உன் அனல் தீண்டா
என் அங்கங்களின் வலி அறிவாயோ நீ
இச்சைகள் தீர்க்காத உன் உஷ்ணத்திற்கு
என் அங்கங்கள் இட்ட சாபம்தான் உன் கிரகணம்...