ஒரு மேகத்தின் கண்ணீர் துளிகள் ....!!!!!
மேகம்...
என் அன்புக்குறிய ஆருயிர் மனிதா
நலமா..!!!
வர்ணிக்க வார்த்தை இல்லை எனில்
சேர்த்து கொள்கிறாயே என் பெயரை..!!
என் முன்னோர்கள் போல் நான்
தூய்மையாய் இல்லை இப்பொது..!!!
தெரியுமா உனக்கு.?
உன் சுயநலம் என்னும் தீபம் ஏற்றி..
நித்தம்... நித்தம்... சூடு போடுகிறாய் எனக்கு
மனம் மறைத்து மரணத்தில் தள்ளுகிறாய்
என்னை.. உன்னால் தோற்று நோய் பெற்று
கக்குகிறேன் அமில மழையாக...!!!
இயல்பாக முச்சு விட தினறுகிறேன் இப்போது..!!
உனக்காக இனிய தென்றல் வீச
திண்டாடுகிறேன் எப்போதும்...!!!
நால்வர் கூடிய சபையில்
நடந்து வரும் கிழிந்த ஆடை
கண்ணியும்...நானும் ஒன்றே...!!!
என் காதலி... மரங்களை வெட்டி
விழ்த்தி விட்டாய் வெகு சிறப்பாய்..!!
நீ என்ன காதலின் எதிரியா..??
முன்பெல்லாம் என் மின்னல் எனும்
சிம்ம ஒலி...என் காதலிக்கு அனுப்பிய
பகிரங்க காதல் ஊடல்கள்..!!!
இப்போதெல்லாம் எந்தன் ஒலி
அவள் இல்லாமல் நான்
கதறும் கண்ணிர் ஓலங்கள்.!!!
மலை முகட்டில் முட்டி மோதும்போதெல்லாம்
கட்டிக் கொண்டு கதறுகிறேன் என்
நிலையை சொல்லி..!!
எனக்கு தீமை செய்யும் உனக்கு
நானும் தீமை செய்யா மாட்டேன்
எப்போதும்...!!
தூய நீரை மட்டுமே கொடுத்து
பழகிவிட்டேன் எப்போதும், அமில மழை
கொடுக்க ஆசை வரவில்லை இப்போது
அதனால் தான் வருவதில்லை
பல முறை இப்போது..!!!
உன் கால்களில் விழுந்து மன்றாட
தெரிந்திருந்தால் விழுந்து கதறியிருப்பேன்
இன்னும் சில காலமாவது என்னை
தூய்மையாய் வாழவிடு என்று..!!!