நட்பு பிரிந்தால் உறவு உண்டு, உறவு பிரிந்தால் ?

உண்மை சொன்ன உறவு பிரியுமாம்
ஒட்ட வைக்கவே பொய்யே தெரியல ?
காட்டு வாசிதான் கவிதை குரங்கிலே
கையை ஒடித்துதான் தாவ முடியுமா ?

புள்ளி கருக்கலாம் புத்தி வெளுக்காமல்
புடிச்ச கொடிகளே தள்ளி விடுகையில்
வாலில் சிக்கியே அறுந்து போயிதான்
வந்த மனிதனாய் நானும் பிறக்கையில்

தாயின் பிள்ளையாய் அன்பை சுமக்கையில்
தனிமரம் கூட தோப்பாய் மாறுமே
கனிகள் கசக்கவே கடிக்கும் சத்தங்கள்
கண்ணை திறக்காமல் பறித்த பழங்களே
ருசிக்கும் சுவையிலே எத்தனை எத்தனை
ரசிக்கும் மனநிலை என்னில் உணரவே

உண்மை சொல்கிறேன் மீண்டுமீண்டுமாய்
ஒட்ட வைக்கத்தான் பொய்யே தெரியல
உறவு பிரியலாம் உயிரும் பிரியலாம்
ஒவ்வொன்றும கூட இடைவெளியில்
எல்லை தாண்டாது இறக்கும் வரையிலே
ஏதோ நினைவாவது சுகமாய் இருக்கட்டும்


எழுதியவர் : . ' .கவி (27-Jun-11, 9:20 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 458

மேலே