உனக்குள்ளே நான்

கனவுக்கு இனிப்பு சுவை
கொடுத்த நீ வாழ்க!

கண்களுக்கு சர்க்கரை காட்சிகள்
கொடுத்த நீ வாழ்க!

என்னில் இல்லா ஒருபாகம்
நீ தான் பெண்ணே!

நீ வந்து போகாமல்
வாழ்வு சொர்க்கம் போகாதே!

ஆயிரம் ஆண்டு இன்பத்தை
ஆருயிரே!அரைநொடி கொடுத்தவள் நீதானே!

கண்களுக்குள் குடியிருந்து என்னை
கண்மணியே!ஆட்கொண்டதும் நீதானே!

என்னையே நானிழந்து சரியும்போது
என்னை தாங்கிப்பிடித்தவள் நீதானே!

தலைவலி வந்தால் தலையணைவேண்டாம்
தாய்மடிபோல உன்மடி கேட்கிறேன்!

தவறு செய்தால் திருத்த வேண்டி
தண்டனைக்கு உன்முத்தம் கேட்கிறேன்!

முடிவுபெறா காதல் ஒன்றை
வாழ்நாள் முழுதும் உன்னிடம் கேட்கிறேன்!

தவறாய் புரிந்த சம்பவத்தில்
பொறுமை காணும் மனங்கள் அடைவோம்!

காலம் நம்மை காதலுக்குசாட்சியாய்
காரணம் காட்டும் காரியம் புரிவோம்!

என்னில் நீயும் உன்னில் நானும்
ஒளிந்துகொள்ளும் வித்தை செய்வோம்!

நீ கண்களால் பார்க்கும் பொருட்கள் யாவும்
விலைகள்ஏறும் அதிசயம் காண்க!

நீ நடந்துவரும் சாலை யாவும்
உறைந்துவரும் காட்சிகள் காண்க!

என் ஆவி செய்யும் அத்தனைசெயலும்
உன் மூச்சுக்காற்றில் என்பதை அறிக!!!

எழுதியவர் : (16-Aug-16, 8:20 pm)
Tanglish : unakulle naan
பார்வை : 99

மேலே