சொல்லித்தீராத ஆசைகள்
சொல்லித்தீராத ஆசைகள்
========================
என்னுடைய இந்த அடுப்பமும்
வாகான பேச்சும்
உனக்குள் நுழைந்து
ஏதாவது செய்திருக்கலாம் தான்
உனக்கு என்னோடு
சொல்ல இருப்பதையும்
எனக்கு உன்னோடு
சொல்ல இருப்பதையும்
வார்த்தைகளால் சொல்லாமல்
மறைத்துவைத்து
நம்மிடம் நாம் சொல்ல
நம் கள்ளப்பார்வையோ
நம் கள்ளச்சிரிப்போ போதும் தான்
எதையும்
சொல்லிக்கொள்ளாமல் சுமக்கும்போது
மேலும் பார்க்கலாமா
என்ற எதிரிப்பார்ப்புகள்
அதிகரிக்கத்தான் செய்யும்
தேக்கிவைத்தவைகள்
பொக்கிஷமாகும்
ஏனென்றால்
"சொல்லப்படாத சொற்கள்தானே
காதலின் வேலி"
தெரியுமா ம்ம்
எதிர்க்கடக்கின்ற எல்லாமும்
அழகாக இருந்திருக்கலாம்தான்
அவையெல்லாம் என்னைக் கடந்தபோதும்
எத்தனைமுறை
திரும்பிப் பார்த்தேன்
எதுவும் நினைவிலில்லை
முதல் முறை ஒன்றை கடந்தபோது
பத்தடிக்கு ஒருமுறை
அதையே திரும்ப பார்க்க வேண்டுமாய்
மனம் கிடந்து கொதித்தது
அன்று கடந்துபோன
உன் பார்வையை மட்டுந்தான்
ஆள் கூட்டத்தினிடையே
எல்லாரோடும்
சகஜமாக பேசிக்கொள்ளும் போதும்
பரஸ்பரம் பழகிக் கொள்ளும் போதும்
நம்மிடம் இருக்கின்ற இயல்பு
நம்மிடம் நாம்
கண்டு முட்டும்போதும்
பேச எத்தனிக்கும் போதும்
எப்போதும் இருந்ததே இல்லை
ஒரு கடற்கரையில்
அலைதொடுகின்ற ஓரத்தில்
நீயும் நானும்
கூட்டம் தவிர்த்து
நடந்து கொண்டிருந்தோம்
நம் பார்வைகளிடம் மௌனமில்லை
நம் துடிப்புகளும் ஏதோ சொல்ல
தவித்துக் கொண்டிருந்தன
தெரிந்தோ தெரியாமலோ
நம் விரல்கள் முட்டிக்கொண்டன
இவையெல்லாம்
உணச்சிகள் பெருக்கெடுத்து
அன்றைய சில இரவுகளை உடைத்திருந்தன
எப்போதும்போல
ஒரே ஒரு ஆசை மட்டும்
கூட்டத்திலிருந்து
விடைப்பெறும்போது
எல்லோரிடமும் போய்ட்டு வர்றேன்னு
சொல்லிட்டு
உன்னிடம் மட்டும்
ஏதும் சொல்லாமே
அதே பார்வையோடும் சிரிப்போடும்
போயிடனும்னு
ஆனாலும் இதையெல்லாம் நாம்
வார்த்தைகளால்
பகிர்ந்திருக்க வேண்டாம் தான்
இப்படி ஒரு இம்சை இருந்திருக்காதுதானே
அதனாலென்ன
காலம் வைகிடவில்லை
இத்தனை தள்ளி நின்றாவது இனி நேசிக்கிறேனே ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
