பிச்சைக்காரன்

பிச்சைக்காரன்

ஆகாயத்தில் பறக்கிறான்
பணத்தின் மேல் புரள்கிறான்
பத்து ரூபாய் தானம் செய்யவும்
பத்தாயிரம் முறை சிந்திக்கிறான்....

மதுவிற்கும் மாதுவிற்கும்
பணத்தை நீராய் கரைக்கிறான்
பசி என்று கேட்பவனுக்கு
பழைய சோறு போடவும் மறுக்கிறான்...

ஆடம்பர செலவுகளையும்
ஆர்பாட்டமாய் செய்கிறான்
அன்பில்லங்கள் நிதி கேட்டாலோ
கஞ்சத்தனம் பார்க்கிறான்....

கோவில் உண்டியல்களில்
கோடி கோடியாய் கொட்டுகிறான்
தானம் என்று கையேந்துபவனை
தள்ளி நிற்க சொல்கிறான்....

பிச்சை என்று கேட்பவனை
ஓட ஓட விரட்டுகிறான்
உண்மையில் பிச்சைக்காரன்
யாரென்று அறியாமலேயே
மண்ணுக்குள் மடிந்து போகிறான்....!!

எழுதியவர் : அன்புடன் சகி (17-Aug-16, 6:40 am)
Tanglish : pichaikkaran
பார்வை : 329

மேலே